Pusanikai

Pusanikai

வெண்பூணி பால் கேட் கீழே ள் மீடியா ப்ளே ட்னை ழுத்வும் 


Click to Download

உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com

சித்திரை மாதம்

அதிக உஷ்ணமான மாதம். அதிகமான சூட்டின் காரணமாக அதிக சுவையை கொண்டதாக கனிகள் மாறுகிறது. வெய்யில் ஏற ஏற கனிகளில் இனிப்புத் தன்மை கூடும். எனவே தான் சித்திரை மாதத்தில் சித்திரை கனி ( விஷூ ) என்ற விழா கொண்டாடப்படுகிறது. கனிகளுக்கு இனிப்புத் தன்மையைத் தருவது வெப்பம். எனவே எந்த கனி அதிக இனிப்பு சுவையுடன் இருக்கின்றதோ அது அந்த அளவிற்கு உடலுக்கு வலிமை தரக்கூடியது. இந்த சித்திரை மாதம் மாதங்களில் முதல் மாதமாக வருவதற்கு காரணம் இந்த 12 மாதங்களிலே வீரியம் நிறைந்தது. சக்தி நிறைந்தது. பூமி அதிக சக்தியை சூரியணிடமிருந்து பெறக்கூடிய மாதம். இந்த சக்தியானது ஒருவரின் மனநிலையும், எண்ணத்தையும் கூட மாற்றும் வல்லமை பெற்றது. சத்தியம் அல்லது தைரியம் என்று உணர்வுகள் உள்ளத்தில் மேலோங்குவதன் அடிப்படையில் அதனை வைபவமாக சத்தியநாரயண பூஜையாக பாரதத்தில் கொண்டாடப்படுகிறது.

காரத்தன்மை, அமிலத்தன்மை

உடலில் சூடு இருந்தால் செரிமானம் நன்றாக நடைபெறும். இந்த வெப்பம் எந்த ஒரு உணவுப் பொருளையும் செரிக்க வைக்கும். “செரிமானத்திற்கு மிக உன்னதமான ஒரு விஷயம் காரத்தன்மை. அமிலத்திற்கு செரிமானத் தன்மை குறைவு”.

“ஒரு மனிதன் 80% காரத்தன்மையுள்ள உணவினையும் 20% அமிலத்தன்மையுள்ள உணவினையும் உட்கொள்ள வேண்டும்”. காரத்தன்மையுள்ள உணவுகள் எதுவெனில் சமைக்காத, வேக வைக்காத , வறுக்காத உணவுகள். அப்படியே பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள் பழங்கள் மட்டுமே. சமைத்த அனைத்து உணவுகளும் புளித்த தன்மையுடையவை. ஆனால் இன்று நாம் 100% சமைத்த புளிப்பு தன்மையுடைய உணவுகளையே முழுமையாக உட்கொண்டு வருகின்றோம். எனவே நம் அனைவருக்குமே செரிமான மண்டலம் என்பது முழுமையான ஆரோக்கியமாக இருக்காது, இருக்கவும் முடியாது. அதாவது 100% சமைத்த உணவினை சாப்பிடும் அனைவருக்கும் கண்டிப்பாக ஜீரண மண்டலத்தின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.

“காரத்தன்மையுள்ள உணவுகளை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது உத்திரவாதம். இதை மீறினால் ஆரோக்கியத்தில் குந்தகம் ஏற்படும் என்பது விதி”.

வயிற்றில் புளிப்புத்தன்மை அதிகரிக்கும் பொழுது அதன் உணர்வு மூளைக்குச் செல்லும். அதாவது காரத்தன்மைக்கு பதிலாக புளிப்புத் தன்மை அதிகமாகி விட்டது. அதனை சரி செய்ய பசி உணர்வைத் தூண்டும். அதாவது காரத்தன்மையான உணவை எனக்குக் கொடு. நான் புளிப்புத் தன்மையினை சரி செய்து கொள்கிறேன் என்று கூறுகிறது. எனவே பசிக்கும் போது தலைவலி ஏற்படும். இதற்கு காரணம் வயிற்றில் புளிப்புத் தன்மை அதிகமாக இருக்கின்றது. ஆனால் நாம் பசி வந்தவுடன் மீண்டும் புளிப்புத் தன்மையுடைய உணவுகளையே உண்ணுகின்றோம். இதனால் பிரச்சினை தீராது. எனவே காரத் தன்மையுள்ள உணவினை உண்ணும்பொழுது இந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக சீராகும். தொடர்ந்து புண்கள் இருந்தால் அது புற்றுநோயாக மாறும் வாய்ப்புண்டு.எனவே இந்த எந்தவிதமான காய்கறிகளை பச்சையைாக சாப்பிட்டாலும் காரத் தன்மை அதிகரிக்கும். உடற்பிரச்சினைகள் தீரும்.

பச்சையாக காய்கறிகள் சாப்பிடலமா?

பெரும்பாலும் மக்கள் கேட்கும் கேள்வி, பச்சையாக காய்கறிகள் சாப்பிட்டால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? இந்த கேள்வியே தவறானது. நீங்கள் சமைத்த உணவினை உண்பதால் தான் பக்க விளைவுகள் ஏற்படும். சமுதாயத்தில் எது தப்போ அது நியாயத்தின் பக்கம் இருக்கிறது. நியாயம் எதுவோ அது தவறாக தெரிகிறது.

காயில் பூச்சி மருந்து அடிக்கிறார்கள், விஷம் இருக்கிறது. சமைக்காமல் அந்த காயினை சாப்பிட்டால் உடலுக்கு சரி வருமா? என்று கேட்கின்றனர். பூச்சி மருந்தால் பூச்சி இறந்து விடுகிறது. ஆனால் அந்த காயானது எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு வளர்ந்து இருக்கிறது என்றால் அந்த காய்க்கு எவ்வளவு உயிர் ஆற்றல் இருக்கும். எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருந்திருக்க வேண்டும். எனவே நீங்கள் அதை உண்ணும்பொழுது அந்த எதிர்ப்பு சக்தி கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் சமைக்கும் பொழுது நாம் வாங்கியது, சாப்பிட்டது அனைத்தும் வீண். அதனால் எந்த பலனும் இல்லை. நேரம் வீணாகின்றது,பணம் வீணாகின்றது, சக்தி வீணாகின்றது, உற்பத்தி வீணாகின்றது, மொத்தத்தில் மிகப்பெரிய இழப்பு. எனவே பச்சைக்காய்கறிகளை உண்ணும் பொழுது உடலில் கழிவுகள் இருக்காது. உடம்பு அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளும். எனவே பச்சையாக காய்கறிகளை உண்ணுவதால் உடலுக்கு நன்மைகள் மட்டுமே விளையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே மக்கள் தவறான கருத்துக்கள் தவறான அபிப்பிராயத்தில் இருக்கின்றார்கள்.

இப்படியாக மக்கள் காய்கறிகளைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். கண்டிப்பாக எதிர்மறையாக நடக்க வாய்ப்பே இல்லை. முறைப்படி சாப்பிடாமல் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சாப்பிட்டால் ஏதேனும் பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக எலுமிச்சை பழத்தை தோலுடன் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் அதன் சாறை மட்டும் உபயோகித்து விட்டு தோலை எறிந்து விடுகிறோம். இது முற்றிலும் தவறானது. தோலில் தான் அத்தனை நல்ல விஷயங்களும் உள்ளன.

உங்கள் மனதில் பயம் இருந்தால் காய்கறிகளில் உள்ள இந்த இரசாயனத்தை, விஷத்தை நீக்க புளி மற்றும் உப்பு கரைசலில் 30 நிமிடம் ஊறவைக்கும் பொழுது எந்தவிதமான விஷமாக இருந்தாலும் இந்த உப்பு, புளி கரைசல் அதை நீக்கி விடும்.

பூசணிக்கையின் நன்மைகள்

  • எனவே வயிற்று புண் நீங்க காரத்தன்மையுள்ள உணவு அவசியம். இந்த வயிற்றுப்புண்ணின் அடுத்த நிலை கேன்சராக மாறும். புற்று நோய் எப்பொழுது குணமாகும் என்றால் “புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை குறைத்து காரத்தன்மையுள்ள உணவுகளை அதிகமாக உண்ணும் போது கேன்சர் செல் பரவாது”. தானாகவே அழியும். எனவே உடலில் உள்ள எந்தவிதமான புளிப்புத் தன்மையாக இருந்தாலும் அதனை சரி செய்யும் ஆற்றல் வெண்பூசணிக்கு உண்டு.
  • இந்த சாம்பல் பூசணிக்காயில் அதிகமாக சோடியம் அடங்கியுள்ளது. எதையும் எதிர்க்கக்கூடிய ஆற்றல் உடையது. இதில் தரமான உப்பு சத்து அடங்கியுள்ளது. அதை சாப்பிடும் போது அது எப்பேர்ப்பட்ட புளிப்புத் தன்மையினையும் மாற்றி விடும். மொத்த உடலில் உள்ள கார, அமிலத் தன்மையினை சமநிலைப்படுத்தும். உடல் சமநிலையில் இருக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • இந்த உடலினை சமநிலைப் படுத்தாவிட்டால் அநேக பிரச்சினைகள் ஏற்படும். இதனை சமநிலைப்படுத்த மூளை அதிகமாக வேலை செய்ய வேண்டி வரும். மூளை தொடர்ந்து வேலை செய்து, வேலை செய்து, தனது ஆற்றலை இழந்து விடும். இதனால் அதிகமாக ஞாபக மறதி ஏற்படும். சாப்பிட்டவுடன் உடலில் சக்தி கிடைக்காமல் ஒருவித மந்தநிலை ஏற்படும். சாப்பிட்டவுடன் தூக்கம் வரும். எனவே காரத்தன்மையுள்ள பச்சை காய்கறி, கனிகளை உட்கொண்டால் இந்த பிரச்சினைகள் ஏற்படாது.
  • குழந்தைகளுக்கு வெண்பூசணி சாறு கொடுப்பதின் மூலம் மூளை பலப்படும். மிகுந்த ஞாபகசக்தியை பெறுவார்கள். மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். அதே போல் வலது, இடது மூளை சமநிலையில் இயங்கும்.
  • ஒரு சிலருக்கு பசி அதிகமானால் தலைவலி ஏற்படும். இதற்கு காரணம் உடலில் உள்ள அதிக புளிப்புத்தன்மையே.
  • கண்களால் நாம் பார்க்கும் பொழுது தசைகள் சுருங்கி விரிந்து தானாகவே சரி செய்து கொள்ள வேண்டும். இதுவே வயதானவர்களுக்கு ஏற்படும் சாளேஸ்வரம் எனப்படுகிறது. இதற்கு காரணம் உடலில் உள்ள அதிக புளிப்புத் தன்மையே.
  • காது வழியாக கேட்பார்கள். அது மிக மெதுவாக சென்று மூளையை அடையும். அதாவது கேட்டவுடன் செயல்படாமல் தாமதமாக புரிந்து கொண்டு செயல்படுவார்கள். புளித்த தன்மை உணவினால் மூளை நரம்புகளின் செயல்பாடுகள் குறைந்து விடும்.
  • உடம்பில் புளிப்புத்தன்மை அதிகமாக அதிகமாக துர்நாற்றம் வீசும்.அவர்களுக்கு வரும் சளி துர்நாற்றத்துடன் இருக்கும்.
  • பேசினால் வாயில் துர்நாற்றம் வீசும்.
  • பசி தாங்க முடியாமல், புளிப்புத் தன்மையால் வாயு மேலேறி நெஞ்சை அடைக்கும். எனவே பசியினால் மூச்சுத் திணறல் ஏற்படலாம். செரிமானம் பிரச்சினையாகி விடும். அவர்களால் பசி தாங்க முடியாது.
  • புளிப்புத் தன்மையால் எரிச்சல் ஏற்படும். மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
  • சிறுநீர் எரிச்சலுடன் மஞ்சள் நிறமாக வெளியேறும். உடலில் தோல்களில் எரிச்சல் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளின் பாதம், கால் எரிச்சலுடன் இருக்கும்.

மேற்கூறிய அனைத்து குறைபாடுகளுக்கும் மூலக்காரணம் உடம்பில் அதிகப் படியான புளித்த, அமிலத் தன்மையுடைய உணவினை உண்பதால் நமது ஒட்டு மொத்த செரிமான மண்டலத்தின் வீழ்ச்சியே. இந்த வீழ்ச்சிக்கு காரணம் நமது தவறான உணவு முறையே. இந்த அனைத்து செயற்பாடுகளையும் எளிமையாக நிவர்த்தி செய்ய வெண்பூசணி சிறந்தது.

குணம் : தைரியம்

நான் சரியாக சாப்பிடுகிறேன். எனது வாழ்க்கை முறையும் உணவு முறையும் சரியாக இருக்கின்றது. இருந்த போதிலும் எனக்கு வயிற்றில் புண் இருக்கின்றது. வெண்பூசணி சாப்பிடும் போது குணமாகின்றது போல் தெரிகின்றது. ஆனால் மீண்டும் வந்து விடுகின்றது. இதற்கு காரணம் அவருடைய மனநிலையில் பாதிப்பு. “பயம் அதிகமானால் உடலில் புளிப்புத் தன்மை அதிகரிக்கும்”. இந்த பயம் ஏன் வருகின்றது?எப்பொழுது பயம் வரும்?

சத்தியத்திற்கு எதிராக ஒரு காரியம் செய்யும் போது நம் பிரஞ்ஞை தன்மையில் நாம் தவறு செய்கின்றோம் என்ற உணர்வு உறுத்தும், பயம் வரும். எனவே நாம் சத்தியத்திற்கு கட்டுப்பட வேண்டும்.

ஆன்மா, உடல் என்றால் என்ன? 

“ஆன்மா என்பது அழிவற்றது. உடம்பு என்பது அழியக்கூடியது”. இந்த உடம்பு எங்கிருந்து வந்தது? இந்த உடல் மண்ணிலிருந்து வந்தது. இறுதியாக இந்த மண்ணிற்குள் செல்ல போகிறது. எனவே நம் உடம்பு பூமியின் ஒரு பொருள். இடைப்பட்ட காலத்தில் அது மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. வளர்ந்து, முதிர்ச்சியாகி, தளர்ந்து விடுகின்றது. முடிவாக மண்ணோடு மண்ணாக மாறிவிடுகின்றது. மண்ணிலிருந்து வந்தது மண்ணுக்குள் போய் விடுகிறது. இது எரிந்து சாம்பல் ஆகும் பொழுது மண்ணோடு மண்ணாக கலந்து விடும். எனவே இந்த உடல் என்பது மண், சாம்பல். எனவே நாம் இந்த சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்கிறோம். கண்ணால் பார்க்கும் எந்த ஒரு பொருளும் ஒரு நாளில் சாம்பலாகும். ஆயுத பூஜையன்று நம் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் பட்டை போடுவார்கள். இதன் பொருள் எல்லாமே ஒரு நாள் சாம்பலாகும் என்று ஆன்மீகத்தில் பகுத்தறிவாக நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்து இருக்கின்றார்கள்.

அப்படியானால் இந்த சாம்பலை பயன்படுத்தும் நபர் யார் ? உடல் மண்ணோடு மண்ணாகிறது. நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன், செயல் செய்து கொண்டிருக்கின்றேன். அதாவது இந்த உயிர் இந்த உடலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆன்மா இந்த உடலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பயன்பாடு முடிந்தவுடன் வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுகின்றது.. எனவே “ஆன்மா மட்டுமே சத்தியம்”.

உடல் என்பது மாற்றத்திற்கு உட்பட்டது.

மூன்று வித உலகம் இருக்கின்றது.

1. பொருள் நிறைந்த உலகம்
2. ஒளி நிறைந்த உலகம்
3. ஒளிக்கும் அப்பாற்பட்ட நிலை.

நாம் இருப்பது இந்த பொருள் நிறைந்த உலகம். எனவே தான் இந்த மூன்று உலகினை குறிக்கும் விதமாக நெற்றியில் சாம்பலால் 3 பட்டையிடுகின்றோம். இந்த மூன்று உலகிலும் நமது ஆன்மா பயணம் செய்யும். எனவே அதனை குறிக்கும் விதமாக நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கின்றோம்.

“ஆன்மா அழிவற்றது, உடல் அழியக்கூடியது”. எனவே நாம் அழியக்கூடிய பொருளில் நாம் முதலீடு செய்யக்கூடாது. நமது பணம்,பொருள், சொத்து இவைகள் அனைத்தும் ஒரு நாளில் மண்ணோடு மண்ணாகி போகும். எனவே நமது முதலீடு நமது ஆன்மாவில் இருக்க வேண்டும். நாம் ஆன்மாவில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? நீ என்ன கர்மா செய்கின்றாயோ அது ஆன்மாவின் முதலீடாக மாறும்.

” தீதும் நன்றும் பிறர் தர வாரா” எனவே என்ன உணர்வால் எந்த காரியத்தை செய்தாலும் அது ஆன்மாவில் பதியும், அது உன்னுடன் தொடர்ந்து வரும். இது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. உன்னுடைய அனைத்து பலன்களும் கூடவே வரும். எனக்கு “என்ன கஷ்டம் வந்தாலும் அது என்னால் தான் உருவாக்கப்பட்டது, எந்த மகிழ்ச்சி வந்தாலும் அது என்னால் தான் உருவாக்கப் பட்டது”, இதற்கு காரணம் நான் தான் என்ற கர்ம தத்துவத்தை, சத்தியத்தை நெற்றியில் விபூதி பூசுவதின் மூலம் மிகப் பெரிய தத்துவத்தை நமக்கு எளிமையாக சொல்லி வளர்த்து இருக்கின்றார்கள்.

உடம்பு மண்ணோடு மண்ணாக போய் விடுவதால் இந்த மண்ணை போட்டோ எடுக்க கூடாது. எடுத்தால் ஆயுள் குறைந்து விடும். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்ற சில விதிமுறைகள் இருந்தது. உருவத்தை பார்த்து வரையக் கூடாது, இந்த பூமியில் பதிவுகள் செய்யக்கூடாது என்ற விதிமுறைகள் இருந்தது. அதனால் மனிதனை எரித்து சாம்பலாக்கி அதையும் கடலில் கரைத்து விட்டார்கள். எந்த தடயமும் இருக்கக் கூடாது என்ற மிகப்பெரிய ஆன்மீக தத்துவத்தை நமது பாரத பூமியில் சொல்லி தந்து இருக்கின்றார்கள். இந்த உடம்பு மண்ணு தான் என்ற தத்துவத்தை ஒரு சராசரி மனிதனுக்கும் புரிய வைத்தார்கள்.

“சத்தியத்தை மட்டுமே பேசுவது தான் உலகின் தனித்தன்மை”. இந்த சத்தியத்தை கடைபிடிப்பதற்காகவே சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று சத்திய நாராயண பூஜை என்ற விழா கொண்டாடப்படுகிறது. தத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தால் நாமும் நாராயணனாக முடியும். நாராயணன் என்பது உயர்ந்த தேவ நிலை. நீ சத்தியத்தை கடைபிடித்தால், நீ மனித நிலையிலிருந்து உயர்ந்து அடுத்த பிறவியில் நாராயணனாக முடியும். நீ இதை விளக்கவே சத்திய நாராயண பூஜை கொண்டாடப்படுகிறது.

சத்தியத்திலிருந்து தவறி போகும் போது பயம் வரும். அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் யாரும் பயப்படமாட்டார்கள். உள்ளுக்குள் ஒரு அதர்ம செயல் அல்லது ஒரு மாற்று கருத்துடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களிடத்தில் வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஒரு வீட்டில் சமைக்கும் ஒரே உணவினை நான்கு பேர் சாப்பிடுகின்றார்கள். அப்படி என்றால் அந்த நான்கு பேருக்கும் ஒரே மாதிரியான வியாதி தான் வர வேண்டும், அப்படியில்லாமல் ஒவ்வொருவருக்கும் விதவிதமான நோய்கள் வரக் காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையை கொண்டவர்கள், குணம் கொண்டவர்கள்.

எனவே நான் வெண்பூசணி சாப்பிட்டேன், குணம் அடைவது போல் தெரிகின்றது. ஆனால் குணம் அடையவில்லை. காரணம் என்னவெனில் பயம்,தைரியம்,துணிச்சல் இல்லை.

“அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”.

எதற்கு பயப்பட வேண்டுமோ அதற்கு பயப்பட வேண்டும், இல்லையென்றால் அது மூடத்தனம். எனவே சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். அதற்கு எதிர்மறையானவற்றிற்கு மட்டுமே பயப்பட வேண்டும். பயத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. பிறரையும் நாம் பயப்படுத்த கூடாது, மற்றவர்களை தொல்லை படுத்தக் கூடாது. நமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. இதுவும் நம்மை பாதிக்கும். எண்ணத்தின் அலைகள் இந்த பிரபஞ்சம் வரை சென்று மீண்டும் அதே போன்று உருவாக்கும்.

எனவே ஒரு பாடத்திட்டத்தை வைத்துக் கொண்டு நோயினை தீர்க்க முடியாது. மனித உடம்பு ஒரு இயந்திரம் அல்ல. அது உணர்வுகளை உள்ளடக்கியது. எனவே உடம்பை ஒரு கருவியாக எடுத்துக்கொள்ள முடியாது, மனதினையும் சேர்த்து தான் வைத்தியம் பார்க்க வேண்டும். எனவே மனநிலையை சரி செய்யாத எந்த வைத்தியமும் ஊனமுற்ற வைத்தியம் தான், எந்த பிரயோஜனமும் இல்லை.

எனவே மனநிலை சரியில்லை என்றால் கூட இந்த மனநிலையை மாற்றக்கூடிய ஆற்றல் இந்த காய்களுக்குண்டு.

வீட்டிற்கு முன்பாக வெண்பூசணியை கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அப்படியென்றால் அதற்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டும். எனவே செரிமான மண்டல பிரச்சனைக்கு ஒரே தீர்வு வெண்பூசணி.

மண்டலம்   : ஜீரண மண்டலம்
குணம்          : தைரியம்
மாதம்           : சித்திரை
செயல்பாடு : செல் உற்பத்தி

வெண்பூணி பால் கேட் கீழே ள் மீடியா ப்ளே ட்னை ழுத்வும் 


Click to Download

வெண்பூணிகாய் பால் ரிள்

ஒரு மாதம் என்றாலும் ஒரு வருடம் என்றாலும்

தாங்கும் பூசணி தாங்கும்

ஓரு வார்த்தை கேட்டாலும் ஒரு பார்வை பார்த்தாலும்

ஆகும் ஞாபகம் ஆகும்

என்னற்ற மறதிகள் நீர் பூசணி உண்ணுங்கள்       – 2

பசி தாங்க முடியாமல் தலை வலி வரலாம்

பசி தாங்க முடியாமல் இளைப்பு வரலாம்

வாயில் துர்நாற்றம் தான் சளியும் துர்நாற்றம் தான்

வியர்வை துர்நாற்றம் தான் நீங்கும் எனலாம்               -2

வறுக்காத  உணவை தான் உண்டிருந்தால்

வறுத்தாது உங்களை நோய்கள் என்றும்

காய் தந்த நார்ச்சத்தும்

பழம் தந்த நீர்ச்சத்தும் நோயின்றி நம்மை தான் வாழவைக்கும்

ஒரு மாதம் என்றாலும் ஒரு வருடம் என்றாலும்

தாங்கும் பூசணி தாங்கும்

ஓரு வார்த்தை கேட்டாலும் ஒரு பார்வை பார்த்தாலும்

ஆகும் ஞாபகம் ஆகும்

வெந்ததை உண்ணாமல் gastric வருமா?

மிளகாயை உண்ணாமல் ulcer  வருமா?

தோல்களும் எரிச்சலாய்

மலமும் தான் எரிச்சலாமய்

சிறுநீர்தான் மஞ்சலாய்

இருக்கும் எனலாம் – 2

thyroid ulcer தான் என்றாலும்

cancer ulcer தான் என்றாலும்

ஆனந்த கண்ணீரால் அபிஷேகம் நான் செய்வேன்

படைப்பினை படைத்தவர்கே

ஒரு மாதம் என்றாலும் ஒரு வருடம் என்றாலும்

தாங்கும் பூசணி தாங்கும்

ஓரு வார்த்தை கேட்டாலும் ஒரு பார்வை பார்த்தாலும்

ஆகும் ஞாபகம் ஆகும்

என்னற்ற மறதிகள் நீர் பூசணி உண்ணுங்கள்       – 2

உங்கள் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவை எங்களுடன் பகிர்ந்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும் service@vegetableclinic.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart